1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Abi)
Last Updated : புதன், 23 ஆகஸ்ட் 2017 (18:04 IST)

வடிவேலுவுக்கு ஜோடியான அஜித் ஹீரோயின்

அஜித்தின் ‘பில்லா 2’ படத்தில் ஹீரோயினாக நடித்த பார்வதி ஓமனகுட்டன், தற்போது வடிவேலு ஜோடியாக நடிக்கிறார்.
 


 


சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் படம் ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’. 2006ஆம் ஆண்டு வெளியான ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ படத்தின் இரண்டாம் பாகமாக இது தயாராகிறது. முதல் பாகத்தில் மோனிகா, தேஜாஸ்ரீ என இரண்டு ஹீரோயின்கள் நடித்திருந்தனர்.

இந்தப் படத்தில், பார்வதி ஓமனகுட்டன் வடிவேலு ஜோடியாக நடிக்கிறார். ‘மிஸ் சவுத் இந்தியா 2018’, ‘ஃபெமினா மிஸ் இந்தியா வேர்ல்டு 2008’ பட்டங்களை வென்றுள்ள பார்வதி, ‘பில்லா 2’ படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.