1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 25 ஜனவரி 2023 (09:18 IST)

பார்த்திபன் மரணம்...? வதந்திக்கு நடிகர் பார்த்திபன் வருத்தம்!

தமிழ் சினிமாவில் முன்னனி  இயக்குனர் பார்த்திபன். புதிய பாதை படத்தில் தொடங்கி இப்போது வரை பல வித்தியாசமான படங்ககளை இயக்க தொடர்ந்து முயற்சித்து வருகிறார். கடைசியாக ஒத்த செருப்பு படத்தை இயக்கி இருந்தார். 
 
இந்நிலையில் பார்த்திபன் இறந்துவிட்டதாக கூறி யூடியூபில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது அது குறித்து விளக்கம் அளித்துள்ள பார்த்திபன். தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த செய்தியை வெளியிட்டு, 
 
நொடிகள் மரணமடைவதும்,மறுபடியும் அடுத்ததாய் உயிர்த்தெழுவதும் இயற்கை! நடிகன் பற்றிய செய்திகள் இப்படி ஊர்வலமாவதன் காரணம் புரியவில்லை! Negativity-ஐ பரப்ப இதுபோல் சில நண்பர்கள் இருக்கிறார்கள்.மகிழ்ச்சியை மனதில் நிரப்புவோம் மக்களுக்கும் பரப்புவோம்! என வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.