அந்த நிலை கமலுக்கும் ரஜினிக்கும் இல்லை - பார்த்திபன் அதிரடி


Murugan| Last Modified திங்கள், 7 ஆகஸ்ட் 2017 (17:53 IST)
அரசியலுக்கு வந்துதான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற நிலையில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுக்கு இல்லை என நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

 

 
பொதுவாக எம்மனசு தங்கம் படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் மதுரையில் நடைபெற்றது. அதில் நடிகர் பார்த்திபன் கலந்து கொண்டு பேசியதாவது:
 
தனி மனித சுதந்திரம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அதன் அளவை உணர்ந்து செயல்படும் நடிகர் கமல்ஹாசனின் செயல் வியப்பு அளிக்கிறது. அதேபோல், அரசின் குறைகளை சுட்டிக்காட்டும் அவரின் துணிச்சலான கருத்துக்களை நான் வரவேற்கிறேன்.
 
ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் பணத்திற்காக, சுய லாபத்திற்காக அரசியலுக்கு வர விரும்புகிறார்கள் என்று சிலர் கூறி வருகிறார்கள். அது தவறானது. அரசியலுக்கு வந்துதான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற நிலையில் அவர்கள் இருவருமே இல்லை” என அவர் கூறினார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :