வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : வியாழன், 24 அக்டோபர் 2019 (14:32 IST)

ஆஸ்கர் விருது விழா: "கிழ் படியில் நான்" - பார்த்திபனுக்கு குவியும் வாழ்த்துக்கள்!

தமிழ் சினிமாவில் எப்போதும் வித்தியாசமான படங்களை எடுக்கும் இயக்குநர் பார்த்திபன். அவரது வித்தியாசமான படைப்புகளில் ஒன்றாக 'ஒத்த செருப்பு சைஸ் 7' படத்தை அவரே எழுதி, இயக்கி, தயாரித்து, நடித்திருந்தார். இப்படம் கடந்த செப்டம்பர் 20ம் தேதி வெளியாகியிருந்தது.


 
படம் வெளியாகும் முன்பே பார்த்திபனின் இந்த புதிய முயற்சியைக் கண்டு பல்வேறு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்தனர். ஒத்த செருப்பு படத்திற்கு நல்ல வரவேற்பும் கிடைத்து. ஆனால், படம் வெளிவந்த அடுத்த நாளே படத்தை திருட்டுத்தனமாக இணையங்களில் பார்க்க தொடங்கினார். இதனால், பார்த்திபன் கோபப்பட்டு மனமுடைந்து இருந்தார்.   
 
இந்நிலையில் தற்போது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெறும் அரங்கின் படியில் அமர்ந்தபடி செல்ஃபி எடுத்து அதனை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள பார்த்திபன் "Oscar விருது வழங்கும் விழா மண்டபம்,கிழ் படியில் நான்.மேல் நோக்கி நகர நிறைய உள்ளன" என குறிப்பிட்டுள்ளார். இதற்கு நெட்டிசன்ஸ் பலரும் கூட விரையில் மேல் படிக்கட்டில் இருந்து போட்டோ எடுப்பீர்கள் வாழ்த்துக்கள் என கூறிவருகின்றனர்.