வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 28 மே 2024 (12:39 IST)

இந்தியில் ரீமேக் ஆகும் பரியேறும் பெருமாள்… ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான பரியேறும் பெருமாள் திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு ரிலீஸாகி மிகப்பெரிய அளவில் அதிர்வலைகளை உருவாக்கியது. இதன் பிறகு மாரி செல்வராஜ் தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க இயக்குனராக உருவாகியுள்ளார்.

இந்நிலையில் பரியேறும் பெருமாள் திரைப்படம் இப்போது இந்தியில் ரீமேக் ஆகிறது. இந்த படத்துக்கு தடக் 2 என்று பெயர் வைத்துள்ளனர். ஏற்கனவே மராத்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான சாய்ராத் திரைப்படத்தை ‘தடக்’ என்ற பெயரில் ரீமேக் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட்டின் முன்னணி இயக்குனரான கரண் ஜோஹரின் தர்மா புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் சித்தார்த் சதுர்வேதி, த்ரிப்தி இம்ரி உள்ளிட்டோர் கதிர் மற்றும் ஆனந்தி நடித்த வேடத்தில் நடிக்கின்றனர். ஷாசியா இக்பால் இந்த படத்தை இயக்குகிறார். படம் நவம்பர் 22 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.