செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 27 செப்டம்பர் 2018 (13:44 IST)

பரியேறும் பெருமாள் படத்தின் டிரைலர் ரிலீஸ்....

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள பரியேறும் பெருமாள் படத்தின் டிரைலர் இன்று 6 மணிக்கு வெளியானது.
 
இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ்இயக்கியிருக்கும் படம் பரியேறும் பெருமாள். இதில் கதிர்,கயல் ஆனந்தி,யோகிபாபு , லிங்கேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள், ஸ்ரீதர் ஒளிப்பதிவில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் 28ம் தேதி உலகெங்கும் வெளியாக உள்ளது.
 
சமீபத்தில் பரியேறும் பெருமாள் படம் தணிக்கை குழுவுக்கு சென்றது. படத்தைபார்த்த அதிகாரிகள் பாராட்டியதுடன், யு சான்றிதழ் வழங்கினர். இந்த படத்தின்  டிரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது.யூ டூபி ல் இதன் ட்ரைலரைக் காணலாம்.