வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Geetha priya
Last Modified: புதன், 25 ஜூன் 2014 (18:40 IST)

தயாரிப்பில் இறங்கும் சூர்யா, முதல் படத்தை இயக்குகிறார் பாண்டிராஜ்?

நடிகர் சூர்யா 2டி என்டர்டெய்ன்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். வெங்கட்பிரபு இயக்கத்தில் அவர் நடிக்கயிருக்கும் படத்தை இந்த புதிய நிறுவனம் சார்பில் சூர்யாவே தயாரிப்பார் எனவும் கூறப்பட்டது. ஆனால் அந்த வாய்ப்பு ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரீனுக்கு சென்றுள்ளது. அவர்தான் சூர்யா நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கும் படத்தை தயாரிக்கிறார்.
இந்நிலையில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் பாண்டிராஜ் இயக்கும் படத்தை தயாரிக்கயிருப்பதாக ஸ்டுடியோ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
பாண்டிராஜ் தற்போது சிம்பு, நயன்தாரா நடிக்கும் இது நம்ம ஆளு படத்தை இயக்கி வருகிறார். சிம்பு சினி ஆர்ட்ஸுக்காக முதல் காப்பி அடிப்படையில் பாண்டிராஜே இப்படத்தை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
 
இதையடுத்து இரண்டு சிறுவர்களை மையப்படுத்திய காமெடிப் படத்தை அவர் இயக்குகிறார். காமெடி நடிகர் சத்யன் முக்கிய வேடமேற்கிறார். ஆரம்ப நிலையில் இருக்கும் இந்த புராஜெக்டை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் என்கிறார்கள்.
 
இந்தத் தகவலை பாண்டிராஜோ‌, சூர்யா தரப்போ இன்னும் உறுதி செய்யவில்லை.
 
சூர்யாவின் இரு குழந்தைகளின் பெயர்களும் ஆங்கில எழுத்து டி யில் ஆரம்பிப்பதால் தனது தயாரிப்பு நிறுவனத்துக்கு 2டி என்டர்டெய்ன்மெண்ட் என பெயர் வைத்துள்ளார்.