Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மார்ச் 9 வெளியாகிறது பண்டிகை


Sugapriya Prakash| Last Modified செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (18:17 IST)
நடிகை விஜயலட்சுமி தயாரித்துள்ள பண்டிகை திரைப்படம் வரும் வெளியாகிறது.

 
 
நடிகை விஜயலட்சுமி உதவி இயக்குனராக இருந்த ஃபெரோஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனது கணவர் ஃபெரோஸுக்காக அவர் தயாரித்துள்ள படம்தான் பண்டிகை. ஃபெரோஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கிருஷ்ணா நடித்துள்ளார்.
 
வன்முறையின் மூலமே தான் நினைத்தது கிடைக்கும் என்று எண்ணும் ஒரு அனாதை இளைஞன், ஒரு  கட்டத்தில் தான் எண்ணியது தவறு என்பதை உணர்ந்து கொள்கிறான். இயல்பான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும்  போது, அவன் தன் காதலிக்காக நிழல் உலக தாதாக்கள் நடத்தும் ஒரு சண்டையில் கலந்து கொள்ள நேரிடுகிறது.  அதில் இருந்து எப்படி அவன் வெளியே வருகிறான் என்பது தான் பண்டிகை படத்தின் கதை.
 
இதில் இளைஞனாக கிருஷ்ணாவும், காதலியாக ஆனந்தியும் நடித்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :