Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பாகுபலி 2 தமிழ் பதிப்பு ட்ரெய்லர் மட்டும் இணையதளத்தில் கசிந்தது எப்படி?

Sasikala| Last Modified வியாழன், 16 மார்ச் 2017 (14:56 IST)
ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் வரும் ஏப்ரல் மாதம்  28ம் தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

 
இந்தியாவே ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருந்த ‘பாகுபலி’ டிரெய்லர் ரிலீஸாகும் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் முதன்முதலில் தியேட்டரில் டிரெய்லரை ரிலீஸ் செய்வதாகவும் கூறப்பட்டது. பாகுபலி 2 படத்தின் தமிழ் பதிப்பு ட்ரெய்லர்  மட்டும் இணையதளத்தில் கசிந்துவிட்டது. அந்த ட்ரெய்லர் கசிந்த வேகத்தில் அதை வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக்கில் பலரும் ஷேர்  செய்தனர். பாகுபலி 2 ட்ரெய்லர் கசிந்த விஷயம் அறிந்த படக்குழுவினர் வேறு வழியில்லாமல் அதை அறிவிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பே வெளியிட்டனர். அனைத்து மொழி பதிப்புகளின் ட்ரெய்லர்களும் முன்கூட்டியே வெளியிடப்பட்டது.
 
பாகுபலி 2 படத்தின் கிராபிக்ஸ் பணி நடந்தபோது சில காட்சிகள் கசிந்தன. உடனே இது குறித்து போலீசில் புகார் அளித்து  கிராபிக்ஸ் டிசைனர் கைது செய்யப்பட்டார். காட்சிகள் கசிந்த நிலையில் தற்போது ட்ரெய்லரும் கசிந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 


இதில் மேலும் படிக்கவும் :