ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 29 மே 2024 (08:35 IST)

படையப்பா ரி ரிலீஸ் எப்போது? தயாரிப்பாளர் பி எல் தேனப்பன் தகவல்!

1999 ஆம் ஆண்டு வெளியான ரஜினிகாந்தின் படையப்பா திரைப்படம் அவரின் திரை வாழ்க்கையில் இமாலய வெற்றி பெற்ற படங்களில் ஒன்று. இந்த படத்தில் ரஜினியோடு, சிவாஜி கணேசன், சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் மணிவண்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். ரஜினிகாந்தே இந்த படத்தைத் தயாரிக்க பி எல் தேனப்பன் இணைத் தயாரிப்பாளராக பணியாற்றினார்.

இப்போது கூட தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பினால் படையப்பா நல்ல டி ஆர் பி யை பெற்றுவருகிறது. இந்நிலையில் படையப்பா படத்தின் இணைத் தயாரிப்பாளர் பி எல் தேனப்பன் சமீபத்தில் ரஜினிகாந்தை சந்தித்து படையப்பா படத்தை ரி ரிலீஸ் செய்வது பற்றி பேசினார்.

அதுகுறித்து இப்போது அவர் மேலதிக தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதில் “ரஜினி சார் இன்னமும் அதே எளிமையோடுதான் இருக்கிறார். அதனால்தான் அவர் 40 வருடங்களுக்கும் மேலாக சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். படையப்பா ரி ரிலீஸ் குறித்து அவரிடம் பேசினேன். இன்னும் 2 மாதங்களில் படையப்பா திரைப்படம் ரி ரிலீஸ் ஆகும். முன்பே ஒருமுறை ரி ரிலீஸ் ஆகி முந்தைய படங்களின் வசூலை முறியடித்தது” எனக் கூறியுள்ளார்.