செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 4 ஜூன் 2020 (18:21 IST)

‘காட்மேன்’ தொடருக்கு ஆதரவாக டுவீட் போட்ட பா.ரஞ்சித்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி, காலா உள்பட ஒருசில படங்களை இயக்கிய ரஞ்சித் அவர்கள் அவ்வப்போது தனது சமூக கருத்துக்களை டுவிட்டரில் பதிவு செய்து வருவார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் தற்போது பரபரப்பாக சமூக வலைதளங்களில் விவாதிக்கப்படும் ஒரு விஷயம் காட்மேன் வெப்தொடர். 
 
இந்த தொடருக்கு இந்து அமைப்புகள் மற்றும் ஒருசில சமூகத்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போலீசில் புகார் கொடுத்தனர். இதனை அடுத்து இந்த தொடரை ஒளிபரப்ப போவதில்லை என ஜீ5 நிறுவனம் அறிவித்துள்ளது 
 
இந்த நிலையில் இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் இந்த தொடருக்கு எதிராக புகார் அளித்தவர்கள் குறித்தும் இந்த தொடரை ஒளிபரப்புவதை நிறுத்திய ஜீ5 நிறுவனம் குறித்தும் தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது: காட்மேன்,  ஜீ5 தொடரின் முன்னோட்டத்தை ஒட்டி, அந்த தொடரின் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் மீது அவதூறுகள் பரப்பியும், அச்சுறுத்தியும், பொய்வழக்குகள் தொடுக்கும் சமூக விரோத சனாதன கும்பல்களுக்கும், துணை நிற்கும் தமிழக காவல் துறைக்கும் வண்மையான கண்டனங்கள்!!
 
இந்த தொடரை தயாரிப்பதில் உறுதுணையாக இருத்துவிட்டு, பிரச்சனை வந்தவுடன் , காட்மேன் தொடரின் குழுவினரை பாதுகாக்க தவறிய ஜீ5 நிறுவனத்தாரின் இச்செயல் ஏற்ப்புடையது அல்ல!!! மேலும் இத்தொடரை வெளியிட உரிய நடவடிக்கை மேற்கொள்க!! 
 
இவ்வாறு இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.