வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (11:22 IST)

அடுத்த உதவி இயக்குனரை களத்தில் இறக்கிய பா ரஞ்சித்!

இயக்குனர் பா ரஞ்சித் தனது நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பாக தனது உதவியாளரகளை இயக்குனராக்கி வருகிறார்.

இயக்குனர் பா ரஞ்சித் தனது நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பாக பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, சேத்துமான் மற்றும் குதிரை வால் ஆகிய படங்களை தயாரித்துள்ளார். இதில் பெரும்பாலான படங்களை அவரின் உதவி இயக்குனர்களே இயக்கினார்கள்.

இந்நிலையில் இப்போது அடுத்ததாக தனது மற்றொரு உதவி இயக்குனரான தினகரன் சிவலிங்கம் இயக்கும் சமூக நகைச்சுவை கதையை தயாரிக்க உள்ளார். இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் விவரம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தை ரஞ்சித்துடன் இணைந்து அருண் பாலாஜி என்பவரும் தயாரிக்க உள்ளார்.