1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 24 ஆகஸ்ட் 2022 (19:49 IST)

டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கையை படமாக்கவுள்ளேன்: பா ரஞ்சித்

pa ranjith
சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு திரைப்படமாkக உள்ளதாக இயக்குனர் பா ரஞ்சித் தெரிவித்துள்ளார். 
 
இயக்குனர் ரஞ்சித் இயக்கிய நட்சத்திரம் நகர்கிறது என்ற திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இதனை அடுத்து அவர் விக்ரம் நடிக்கவிருக்கும் தங்கச்சுரங்கம் குறித்த படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் டாக்டர் அம்பேத்கார் வாழ்க்கையில் உள்ள ஒரு முக்கிய பகுதியை திரைப்படமாக்க உள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார் 
 
இந்தியாவின் மிக முக்கியமான அரசியல் மாற்றத்திற்கான காலம் அது என்றும் அந்த காலத்தை படமாக எடுக்க ஆர்வமாக உள்ளது என்றும் நிச்சயம் அதை செய்வேன் என்றும் பா ரஞ்சித் தெரிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.