1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 14 மார்ச் 2024 (10:39 IST)

பா ரஞ்சித் இயக்கும் இந்தி படத்தில் ரண்வீர் சிங் நடிக்கிறாரா? அவரே அளித்த விளக்கம்!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் பா ரஞ்சித் தற்போது விக்ரம் நடிக்கும் தங்கலான் படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் பா.ரஞ்சித் அடுத்து ஒரு ஹிந்தி படம் இயக்கப்போவதாக சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்திருந்தார்.

அந்த படம் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய ஜார்க்கண்ட் பழங்குடினரான பிர்சா முண்டாவின் வாழ்க்கை வரலாற்று படமாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த படம் இன்னும் தொடங்கப்படவில்லை.

இந்நிலையில் இப்போது பா ரஞ்சித் ஒரு பாலிவுட் படத்தை இயக்க உள்ளதாகவும், அதில் ரண்வீர் சிங் கதாநாயகனாக நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அது குறித்து பேசியுள்ள இயக்குனர் ரஞ்சித் “நான் இந்தியில் படம் இயக்கப் போகிறேன். ஆனால் ஹீரோ யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. சரியான நேரத்தில் அறிவிப்பு வெளியாகும்” எனக் கூறியுள்ளார்.