புதன், 30 அக்டோபர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Updated : புதன், 30 அக்டோபர் 2024 (18:43 IST)

பா ரஞ்சித்தின் ‘பாட்டல் ராதா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு.. ‘விடுதலை 2’ படத்திற்கு போட்டியா?

இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கிய "தங்கலான்" திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெளியானது. தற்போது, அவர் தனது அடுத்த படத்திற்கான பணிகளில் மும்முரமாக நின்றிருக்கிறார். "வேட்டுவம்" எனும் தலைப்பில் உருவாகும் புதிய படத்தினை அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
 
இந்த நிலையில், பா. ரஞ்சித் தனது அடுத்த படத்தின் பணிகளை முன்னெடுத்து வந்தாலும், சில படங்களை தயாரிப்பதிலும் ஈடுபட்டுள்ளார். அதில், ஒரு படத்தின் வெளியீட்டு அறிவிப்பை அவர் தனது சமூக ஊடகங்களில் சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
 
குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், மாறன் மற்றும் ஆண்டனி பாரி இளவழகன் ஆகியோர் நடித்துவரும் "பாட்டல் ராதா" என்ற திரைப்படத்தை பா. ரஞ்சித் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தை தினகரன் சிவலிங்கம் இயக்குகிறார். சாம் சிஎஸ் இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்த படம் டிசம்பர் 20ஆம் தேதி கிறிஸ்துமஸ் விருந்தாக வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதே டிசம்பர் 20ஆம் தேதி தான் வெற்றிமாறனின் ‘விடுதலை 2’ படம் ரிலீஸாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva