பிக்பாஸ் வீட்டை விட்டு செல்ல விரும்பும் ஓவியா; அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Sasikala| Last Modified வெள்ளி, 4 ஆகஸ்ட் 2017 (18:15 IST)
பிக்பாஸ் வீட்டில் இருக்கப் பிடிக்கவில்லை நான் எங்க வீட்டுக்கு போகிறேன் என்று ஓவியா அடம்பிடித்து வருவதாக கூறப்படுகிறது. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் முடிவில் இருக்கிறார் ஓவியா. இனியும் அந்த வீட்டில் உள்ளவர்கள் செய்யும் செயல் தாங்க முடியாது என்ற நிலைக்கு வந்துள்ளாராம்.

 
ஓவியா மற்றும் ஆரவ் ஆகியோரிடையே காதலுக்காக நடந்து வரும் பிரச்சனை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. பிக்பாஸ்  வீட்டில் உள்ள மற்றவர்கள் தன்னை ஓரம் கட்டுவதால் மனமுடைந்துள்ள ஓவியா வீட்டை விட்டு வெளியேறும் முடிவில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
நேற்றைய நிகழ்ச்சியின்போது இரவு கொட்டும் மழையில் வெளியில் படுத்திருந்தார். பின்னர் சினேகன், ஆரவ் ஆகியோர் நீண்ட  நேரம் பேசி அவரை உள்ளே அழைத்து வந்தனர். பின்னர் உண்ணாவிரதத்தில் இறங்கினார் ஓவியா.
 
பிக் பாஸ் தன்னை அழைத்து பேசினால் மட்டுமே இது முடிவுக்கு வரும் என்று கூறியுள்ளார். இதை பார்த்த ஓவியா ரசிகர்கள்  அதிர்ச்சியில் உள்ளனர். இதனால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் முடிவில் ஓவியா உள்ளதாகவும் தெரிகிறது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :