பிக்பாஸ் நிகழ்ச்சிக்க்கு பின்னர் வெளியாகும் ஓவியாவின் முதல் படம்


sivalingam| Last Modified செவ்வாய், 8 ஆகஸ்ட் 2017 (22:40 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஓவியாவுக்கு நயன்தாரா, த்ரிஷா அளவுக்கு மிகப்பெரிய புகழ் கிடைத்துள்ளது. அவரை ஒப்பந்தம் செய்ய பெரிய பெரிய நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. ஆனால் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போக வேண்டிய சூழ்நிலை இருப்பதால் அவர் தற்போது வேறு புதிய படங்களில் ஒப்பந்தமாகாமல் இருக்கின்றார்


 

 
 
இந்த நிலையில் விஷ்ணுவிஷால் ரெஜினா நடித்து வரும் 'சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்' படத்தில் ஓவியா சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார். ஆனால் இந்த படத்தில் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பே ஒப்பந்தமாகிவிட்டார் என்றும், நிகழ்ச்சி முடிந்ததும் தனது பகுதியை நடித்து கொடுத்துவிடுவதாக உறுதியளித்துவிட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது
 
தற்போது அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதால் விரைவில் இந்த படத்தின் படப்ப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஓவியாவின் நடிப்பில் வெளியாகும் இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :