நமிதாவை நடுங்க செய்த நாட்டாமையே: ஓவியா புரட்சிப்படையின் அட்ராசிட்டி!

நமிதாவை நடுங்க செய்த நாட்டாமையே: ஓவியா புரட்சிப்படையின் அட்ராசிட்டி!


Caston| Last Updated: திங்கள், 17 ஜூலை 2017 (16:15 IST)
நடிகை ஓவியா படங்களில் நடித்து பெற்ற புகழை மிஞ்சும் அளவுக்கு பிக் பாஸில் அனைவராலும் கவனிக்கப்பட்டு வருகிறார். பலரும் ஓவியாவுக்கு ரசிகர்களாக மாறி வருகின்றனர்.

 
 
பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் ஒரே கருத்தில் இருந்தால் நடிகை ஓவியா மட்டும் எதிர் கருத்தில் இருப்பார். இதனால் பிக் பாஸ் வீட்டில் உள்ள பலருக்கும் ஓவியாவை பிடிக்காது. இதனால் ஒவ்வொரு வாரமும் வெளியேறுபவர்கள் பட்டியலில் ஓவியா நாமினேட் செய்யப்படுவார்.
 
ஆனால் ரசிகர்கள் மற்றும் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று ஓவியா அதிக வாக்குகளுடன் ஒவ்வரு வாரமும் தப்பித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ஓவியாவை புகழும் வண்ணம் பல மீம்ஸ்கள் இணையத்தில் அவரது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.
 
அதில் ஓவியா புரட்சிப்படை என்னும் பெயரில் உலா வரும் மீம்ஸ் ஒன்று பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதில், நமிதாவை நடுங்க செய்த நாட்டாமையே, ஆர்த்தியை அளரவிட்ட ஆளுமையே, காயத்ரியை கதரவிட்ட கம்பீரமே, பரணிக்கு பை சொன்ன பாசமே, தங்க தலைவி ஓவியா பிக் பாஸ் டைட்டில் வெற்றி பெற வாழ்த்தும் ஓவியா புரட்சிப்படை என கூறப்பட்டுள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :