பிக்பாஸ் வேண்டாம் ; கொச்சி சென்று விட்டாரா ஓவியா?


Murugan| Last Modified சனி, 5 ஆகஸ்ட் 2017 (14:44 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய ஓவியா விமானம் மூலம் கொச்சி சென்று விட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

 

 
நடிகை ஓவியா தற்கொலை செய்ய முயற்சித்ததாகவும், மன அழுத்தம் காரணமாக வெளியேறியதாகவும் நேற்றிலிருந்து தகவல்கள் பரவி வந்தது. இந்நிலையில் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விடைபெறுகிறார் என கூறப்பட்டது. 
 
இப்படி வெளிவரும் செய்திகள் உண்மையா பொய்யா? ஓவியாவுக்கு உண்மையிலேயே என்ன ஆச்சு என்பது புரியாமல் அவரது தீவிர ரசிகர்கள் இணையத்தை அலறவிட்டு வருகின்றனர். ஓவியா இல்லாமல் பிக் பாஸ் இல்லை என ஹேஷ் டேக் உருவாக்கி அதனை ட்ரெண்ட் ஆக்கி வந்தனர். 
 
அந்நிலையில் நடிகை ஓவியா தான்னை பற்றி பரவி வந்த வதந்திக்கு விளக்கம் அளித்துள்ளார். அதில் நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது உண்மை தான். மீண்டும் நிகழ்ச்சிக்கு செல்ல பேச்சுவார்த்தை நடந்து வருவதாக விளக்கம் அளித்ததாகவும் கூறப்பட்டது. மேலும், இன்றைய நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசனுடன் அவர் கலந்து கொள்வார் எனவும் கூறப்பட்டது.
 
இந்நிலையில், நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த அவர் சென்னையிலிருந்து விமானம் மூலம் தனது சொந்த ஊரான கொச்சினுக்கு சென்றுவிட்டார் எனக் கூறப்படுகிறது. 
 
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மீண்டும் ஓவியா வருவார் எனக் எதிர்பார்த்திருந்த அவரின் ரசிகர்களை இந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :