திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 28 ஜூலை 2017 (00:13 IST)

திசை மாறும் பிக்பாஸ்: திடீரென குறைந்த பார்வையாளர்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து கொண்டிருந்தது என்றால் அது ஓவியாவுக்காக மட்டுமே. 



 
 
ஆனால் அந்த டிவி நிர்வாகத்தினர்களுக்கு என்ன அழுத்தமோ தெரியவில்லை, கடந்த சில நாட்களாக காயத்ரியை நல்லவராக காண்பிக்கவே பெரும் முயற்சி செய்து வருகிறது.
 
குறிப்பாக இன்றைய நிகழ்ச்சியில் ஓவியாவின் காட்சிகள் இருட்டடிப்பு செய்யப்பட்டது. இன்றைய ஒன்றரை மணி நேர நிகழ்ச்சியில் ஓவியா ஒரு பத்து நிமிடம் மட்டுமே தோன்றியிருப்பார். ஆனால் காயத்ரி நிகழ்ச்சியின் ஹீரோ மாதிரி கிட்டத்தட்ட அனைத்து காட்சிகளிலும் இருந்தார்.
 
இதனால் வழக்கமான வரவேற்பு இன்று கிடைக்கவில்லை. இன்று திடீரென பார்வையாளர்களின் எண்ணிக்கை பலமடங்கு குறைந்துவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இப்படியே ஓவியாவை இருட்டடிப்பு செய்து கொண்டே இருந்தால் நிச்சயம் பிக்பாஸூக்கு ஒருநாள் மூடுவிழா நடப்பது நிச்சயம்