Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விஜய்க்கு ஜோடியாகும் ஓவியா?


cauveri manickam| Last Modified வியாழன், 10 ஆகஸ்ட் 2017 (15:39 IST)
விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் படத்தில், ஓவியா நடிக்கலாம் எனத் தெரிகிறது.

 

 
ஒரே ஒரு சம்பவம், ஒருவரின் வாழ்க்கையையே மாற்றிப் போட்டுவிடும். அது நல்லதாகவும் இருக்கலாம், கெட்டதாகவும் இருக்கலாம். விஜய் டிவியின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஓவியாவுக்கு, அது இருநூறு சதவீதம் நல்லதாக அமைந்திருக்கிறது. அவர் படத்தில் நடித்தபோது கூட இல்லாத ரசிகர்கள், இப்போது பெரும்படையாகத் திரண்டிருக்கிறார்கள்.

அத்துடன், ஏகப்பட்ட சினிமா வாய்ப்புகளும் ஓவியாவுக்கு கிடைத்து வருகின்றன. விஜய் படமும் அதில் ஒன்று என்பதுதான் ஹைலைட். ‘துப்பாக்கி’ மற்றும் ‘கத்தி’ படங்களைத் தொடர்ந்து, விஜய்யும், ஏ.ஆர்.முருகதாஸும் மறுபடி இணைகிறார்கள். சன் பிக்சர்ஸ் நிறுவனம் 150 கோடி ரூபாய் செலவில் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இதில், ஓவியாவை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனத் தெரிகிறது. ஹீரோயினாக இல்லாமல், முக்கிய கேரக்டரில் ஓவியா நடிக்கலாம் எனத் தெரிகிறது.


இதில் மேலும் படிக்கவும் :