ஓவியாவுக்கு தீவிர மன அழுத்தம்: கைவிட்ட கவுன்சிலிங்; பிக் பாஸுக்கு பை பை!

ஓவியாவுக்கு தீவிர மன அழுத்தம்: கைவிட்ட கவுன்சிலிங்; பிக் பாஸுக்கு பை பை!


Caston| Last Modified சனி, 5 ஆகஸ்ட் 2017 (12:49 IST)
பிக் பாஸ் வீட்டில் ஓவியாவுக்கு என்ன ஆச்சு என்பது தெரியாமல் பலரும் மண்டையை பிய்த்துக்கொண்டு இருக்கிறார்கள். இதில் ஓவியா தற்கொலை செய்துகொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் செய்திகள் பரவுகிறது.

 
 
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் உள்ள ஓவியா தீவிர மன அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு கவுன்சிலிங் அளிக்கப்பட்டதாக தகவல் ஒன்று வருகிறது. ஓவியாவின் நலன் விரும்பிகள் பலரும் அவரை நேற்று சந்தித்து பேசியுள்ளனர்.
 
திறமையான மனோதத்துவ நிபுணர்கள் ஓவியாவுக்கு நான்கு முறை கவுன்சிலிங் கொடுத்துவிட்டார்கள். ஆனாலும் ஓவியாவின் மன அழுத்தம் குறையவே இல்லையாம். இதனையடுத்து ஓவியா நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
இனிமேலும் நான் பிக் பாஸ் வீட்டுக்கு செல்ல விரும்பவில்லை என ஓவியா கூறி வருகிறாராம். அவரது நலன் விரும்பிகளும் அதனை தான் கூறுகிறார்களாம். ஆனால் ஓவியா சென்றுவிட்டால் தங்கள் வியாபாரம் டல்லடித்து விடுமே என நினைக்கின்றது சேனல் தரப்பு.
 
இந்நிலையில் இன்று மாலை கமல்ஹாசனை பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா சந்திப்பார் என உறுதிசெய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ஓவியா இல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சி இல்லை என்பதால் அவரை கொஞ்ச நாட்கள் கழித்து மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் களம் இறக்கலாம் என கூறப்படுகிறது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :