பிக்பாஸ் வீட்டில் ஓவியாவுக்கு எதிராக திட்டம் தீட்டும் சிநேகன்!

Sasikala| Last Modified வியாழன், 3 ஆகஸ்ட் 2017 (12:03 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தினம் ஒரு சர்ச்சை, பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் தினமும் ஓவியாவுக்கு தான் முக்கியத்துவம் தரப்படுகிறது, மற்றவர்கள் புறக்கணிக்க படுகிறார்கள் எனவும், அதை மாற்ற கவிஞர்  சினேகன் ஒரு யோசனை தெரிவித்துள்ளார்.

 
இரவில் தூக்கம் வராமல் விழித்து கொண்டிருந்த பிக்பாஸ் போட்டியாளர்கள் ரைசா, ஜூலி, காயத்ரி மற்றும் சிநேகன்,  ஓவியாவை பற்றி பேசும்போது "ஓவியா செய்யும் பிரச்சனைகள் போல தினமும் நாமும் ஏதாவது செய்வோம். இன்னைக்கு ரைசாவை தூக்கி போட்டு அடிக்குறேன், நாளைக்கு அவ என்னை அடிக்கட்டும், இன்னொரு நாள் நாம சேர்ந்து ஜூலியை தூக்கி போட்டு மிதிப்போம்." "ஜூலி பரணி மாதிரி சுவர் ஏறி வெளியே குதிக்கட்டும்.. அப்போ தான் நமக்கு முக்கியத்துவம் தருவாங்க"  என்றார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :