திங்கள், 13 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 25 ஜூலை 2017 (22:59 IST)

உனக்குத்தான் இதயமே இல்லையே! ஜூலியை கேவலப்படுத்திய ஓவியா

தான் சொன்னதே சரியென்று அடம்பிடிக்கும் ஜூலியை எப்படியாவது திருத்த வேண்டும், அவருக்கு கெட்ட பெயர் வரக்கூடாது என்று ஓவியா எவ்வளவோ முயற்சித்தும், மரமண்டை ஜூலிக்கு புரியவே இல்லை என்பது இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தெரிய வருகிறது.



 
 
ஒரே ஒரு முறை என்னிடம் மன்னிப்பு கேட்டுவிடு எல்லாம் சரியாகிவிடும் என்று ஓவியா சொல்லியும் காயத்ரியின் பேச்சை கேட்டுக்கொண்டு ஓவியாவிடம் முகம் கொடுத்து பேசவே மறுத்து வருகிறார் ஜூலி
 
இந்த நிலையில் இன்று பாத்திரம் கழுவிக்கொண்டே ஓவியா, ஜூலிக்கு அறிவுரை கூறினார். மற்றவர்கள் மனம் புண்படும்படி பேசாதே, பொய் சொல்லாதே, இதனால் மற்றவர்களின் இதயம் வலிக்கும் என்று கூறியபோது அவருடைய பேச்சை கேட்காமல் அந்த விட்டு நகர்ந்து செல்கிறார் ஜூலி. அப்போது உனக்கு இதயம்ன்னு ஒண்ணு இருந்தால்தானே மற்றவர்களின் இதயம் குறித்து நினைக்க தோன்றும் என்று கூறுகிறார். இந்த அளவுக்கு கேவலப்படுத்தியும் எதையும் கண்டு கொள்ளாமல் செல்கிறார் ஜூலி.