ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆன ஓவியா

Cauveri Manickam (Sasi)| Last Updated: சனி, 5 ஆகஸ்ட் 2017 (11:26 IST)
பைத்தியம் போல நடந்துகொண்ட ஓவியா, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டதாகத் தகவல்  வெளியாகியுள்ளது.

 
 
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில், ஓவியா கடந்த சில நாட்களாக பைத்தியம் போல நடந்து  கொண்டார். அவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது. இந்நிலையில், நேற்று மாலை ஓவியா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உயிருக்குப் போராடி வருவதாகத் தகவல் கிடைத்தது. எனவே, காவல்துறையினர் ‘பிக்  பாஸ்’ வீட்டுக்கே சென்று நேரடி விசாரணையில் ஈடுபட்டனர்.
 
இந்நிலையில், ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறினார் ஓவியா. அவர் காரில் செல்லும் புகைப்படம் வைரலானது.  ‘இனிமேல் ‘பிக் பாஸ்’ பார்க்க மாட்டோம்’ என ஓவியா ரசிகர்கள் வேறு சமூக வலைதளங்களில் கூறிவந்தனர். மனநலம் பாதிக்கப்பட்டுள்ள ஓவியா, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :