1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023 (07:28 IST)

சர்ச்சைகள் எழுந்தாலும் வசூலில் முன்னேறும் ஓப்பன்ஹெய்மர்… இந்தியாவில் 100 கோடி வசூல்!

ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் சிலியன் மர்ஃபி, ராபர்ட் டௌனி ஜூனியர் உள்ளிட்ட பலர் நடித்து ஜூலை 21 ஆம் தேதி வெளியான படம் ஓப்பன்ஹெய்மர். இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பான் மீது போடப்பட்ட அணுகுண்டுகளை கண்டுபிடிக்க காரணகர்த்தாவான விஞ்ஞானி அனுகுண்டின் தந்தை என அழைக்கப்படும் ராபர்ட் ஓப்பென்ஹெய்மரின் வாழ்க்கை வரலாற்றின் ஒரு பகுதியாக உருவாகியுள்ளது இந்த திரைப்படம்.

இந்த படம் இந்தியாவில் மட்டும் தற்போது 100 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளது. ஜூலை 21 ஆம் தேதி ரிலீஸான இந்த திரைப்படம் இந்தியாவில் சில சர்ச்சைகளை எதிர்கொண்டது.

படத்தில் ஒரு உடலுறவுக் காட்சியின் போது பகவத் கீதையின் “நான் உலகை அழிக்கும் மரணமாகிவிட்டேன்” எனும் வசனம் இடம்பெற்றது இந்தியாவில் பெரும் எதிர்ப்பை சந்தித்தது. இதையடுத்து அந்த படத்துக்கு தடை விதிக்கவேண்டும் என எதிர்ப்புகள் எழுந்தன.

உலக அளவிலும் ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் நல்ல வசூலை ஈட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.