செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 14 செப்டம்பர் 2023 (16:19 IST)

மாணவ, மாணவியருக்கு 'விஜய் பயிலகம் திறப்பு'- புஸ்ஸி ஆனந்த் தகவல்

vijay payilagam
நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் மக்களுக்காக பணியில் ஆக்டிவாக இயங்கி வருகிறது.

சமீபத்தில், சென்னை, பனையூரில், விஜய் மக்கள் இயக்க வழக்கறிஞர்கள் அணி, இளைஞரணி, மகளிரணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில், இன்று வேலூர் மாவட்டம் கீழ் ஆலந்தூர் ஊராட்சியில், புதிய மக்கள் இயக்க பெயர்ப்பலகை மற்றும் இயக்கக் கொடியை ஏற்றி வைத்து, பெண்களுக்கு புடவை, ஆண்களுக்கு வேட்டி, மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தினரால் தமிழகம் முழுவதும் விஜய் பயிலகம் தொடங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில்,  இன்று வேலூர் மாவட்டம் பொகளூர் ஊராட்சி மற்றும் பல்லாலகுப்பம் ஊராட்சி ஆகிய இடங்களில் விஜய் பயிலகம் திறக்கப்பட்டது.

இதுகுறித்து விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தன் சமூக வலைதள பக்கத்தில்,

'' தளபதி  அவர்களின் சொல்லுக்கிணங்க, தளபதிவிஜய்பயிலகம்,

வேலூர் மாவட்ட பேர்ணாம்பட்டு ஒன்றிய தொண்டரணி தலைமை தளபதி விஜய் மக்கள்இயக்கம்  சார்பாக, பொகளூர் ஊராட்சி மற்றும் பல்லாலகுப்பம் ஊராட்சி ஆகிய 2 இடங்களில் பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் தளபதி விஜய் பயிலகம் திறக்கப்பட்டது.!

இந்நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட பொறுப்பாளர், மாவட்ட தலைவர்கள், அணித் தலைவர்கள், நகரம், ஒன்றியம், பகுதி, கிளை மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்’’ என்று தெரிவித்துள்ளார்.