1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 19 மார்ச் 2024 (14:53 IST)

ஜப்பானில் ரிலீஸ் ஆகும் நோலனின் ஓப்பன்ஹெய்மர்… போஸ்டரில் நடந்த மாற்றம்!

ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் சிலியன் மர்ஃபி, ராபர்ட் டௌனி ஜூனியர் உள்ளிட்ட பலர் நடித்து கடந்த ஆண்டு ஜூலை 21 ஆம் தேதி வெளியான படம் ஓப்பன்ஹெய்மர். இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பான் மீது போடப்பட்ட அணுகுண்டுகளை கண்டுபிடிக்க காரணகர்த்தாவான விஞ்ஞானி அனுகுண்டின் தந்தை என அழைக்கப்படும் ராபர்ட் ஓப்பென்ஹெய்மரின் வாழ்க்கை வரலாற்றின் ஒரு பகுதியாக உருவாகியுள்ளது இந்த திரைப்படம்.

இந்த படம் உலகம் முழுவதும் சர்ச்சைகளையும் விவாதங்களையும் உருவாக்கியது. இந்த படம் இந்தியாவில் மட்டும் தற்போது 100 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளது. சமீபத்தில் நடந்த ஆஸ்கர் விருது விழாவில் 7 விருதுகளை வென்று சாதித்தது.

இந்நிலையில் இப்போது ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் ஜப்பானில் வெளியாக உள்ளது. இதற்கான போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்த போஸ்டரில் கதாநாயகனுக்கு பின்னால் டவர் ஒன்று இருப்பது போல மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரிஜினல் போஸ்டரில் கதாநாயகனுக்குப் பின்னால் அணுகுண்டு இருப்பது போல வடிவமைக்கப்பட்டு இருக்கும்.