வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: வெள்ளி, 27 பிப்ரவரி 2015 (15:02 IST)

பதினைந்து கோடி பொறியில் வடிவேலின் எலி

இம்சை அரசன் 23 -ஆம் புலிகேசி வெற்றியின் ஹேங்ஓவரிலிருந்து இன்னும் விடுபடாமலே இருக்கிறார் வடிவேலு. இந்திரலோகத்தில் நா அழகப்பன், தெனாலிராமன் என இரு காஸ்ட்லி தோல்விகளுக்குப் பிறகும் வடிவேலின் போதை இறங்காதது ஆச்சரியம்.
 
நடித்தால் ஹீரோவாக என்ற முடிவில் உறுதியாக இருப்பவர், எலி என்ற படத்தில் நாயகனாகியிருக்கிறார். தனது சொல்பேச்சு கேட்கும் யுவராஜையே மீண்டும் இயக்குனராக்கி எலியை எடுத்து வருகிறார். 
 
இந்தப் படத்தின் பட்ஜெட் சுமாராக பதினைந்து கோடிகள். அதில் பாதி வடிவேலின் சம்பளம். எலி பதினைந்து கோடியை சம்பாதிக்குமா இல்லை மதுரையைச் சேர்ந்த அப்பாவி தயாரிப்பாளரை கடனாளியாக்குமா?