வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: வெள்ளி, 17 ஏப்ரல் 2015 (15:17 IST)

திரியில் இணையும் ஸ்வாதி, அஸ்வின்

திரி என்பதை தூண்டிவிட வேண்டும். அந்த தூண்டல் தீபத்திற்காகவும் இருக்கலாம், தீப்பந்தமாகவும் மாறலாம். எனிலும் தூண்டல் ஒன்றுதான். இந்தக் கருத்தை பிரதிபலிக்கும் படம்தான், திரி.
 

 
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் இணைந்து நடித்த ஸ்வாதி, அஸ்வின் திரியில் மீண்டும் இணைந்திருக்கிறார்கள். படம் குறித்து இயக்குனர் அசோக் அமிர்தராஜிடம் கேட்டோம்.
 
தாயைப் போல பிள்ளை என்ற பழமொழி என்னை பாதித்ததன் விளைவுதான் இந்தக் கதை. ஒரு பிள்ளையின் வாழ்க்கையில் பெற்றோர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்ற அடிப்படையில் மனித உணர்வுகளை மையமாக வைத்து படமாக்கியுள்ளேன்.
 
விறுவிறுப்பான திரைக்கதையோட்டம் உள்ள இப்படத்தில் அஸ்வின் தனது முந்தைய படங்களில் இல்லாத அளவுக்கு நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இப்படம் அவருக்கும் புதிய உயரத்தைக் கொடுக்கும் என்பதில் ஐயம் இல்லை. திரி குடும்பத்துடன் பார்க்கக் கூடிய ஒரு பொழுதுபோக்குத் திரைப்படம் என்றார்.