1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 2 ஜூன் 2017 (12:53 IST)

இணையத்தில் வைரலாகும் ரஜினியின் காலா படத்தின் பாடல் வரிகள்!

பா.இரஞ்சித் இயக்கும் ரஜினிகாந்த் நடிக்கும் 164 -வது படம் காலா. இப்படத்தினை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கிறது. மும்பையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காலா படப்பிடிப்பு கடந்த வாரம் மே 28-ம் தேதி தொடங்கியது.

 
இப்படத்தின் ஓப்பனிங் பாடல் சமீபத்தில் மும்பையில் உள்ள தாராவி பகுதியில் எடுக்கப்பட்டது, அதை யாரோ படக்குழுவிற்கு தெரியாமல் வீடியோவாக ஒரு சில நிமிடங்கள் எடுத்து வெளியிட்டுள்ளனர். இதனால் படக்குழுவிற்கு அதிர்ச்சி ஆனதாக தகவல்கள் வெளியானது. காலா படம் முழுவதையும் இணையத்தில் பார்த்தால் கூட ஆச்சரியமில்லை. ஏனெனில் அந்த அளவிற்கு படத்தின் ஒவ்வொரு தகவலும் லீக் ஆகிக்கொண்டே இருக்கின்றது.
 
தற்போது ஒரு படி மேலே சென்று படத்தின் பாடல் ஒன்றையே லீக் செய்துவிட்டனர். இந்த பாடல் நெருப்புடா ஸ்டைலில் அருண்ராஜ் காமராஜ் தான் பாடியுள்ளார், ‘ஏய்...வேட்டிய மடிச்சு கட்டி விட்டு, வெள்ள தாடிய தடவி விட்டு, முறைச்ச  பார்வையில் அனலை கக்கி, அண்ணன் நடந்து வந்து தெறிக்க விட்டா காலா’ என பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளது.