1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வியாழன், 6 ஜூலை 2017 (11:09 IST)

வயதாகிவிட்டதா ஸ்ருதி ஹாசனுக்கு?

ஸ்ருதி ஹாசனை, தெலுங்கு ஹீரோக்கள் சீனியர் நடிகை பட்டியலில் சேர்த்திருக்கின்றனர்.

 
 
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் நடித்து வருகிறார் ஸ்ருதி. தமிழ், தெலுங்கைவிட ஹிந்தியில் நடித்தால் பெரிய புகழ் கிடைக்கும் என்று எண்ணி, பாலிவுட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தார். ஆனால், அவர் நடித்து சமீபத்தில்  ரிலீஸான படங்கள் சரியாகப் போகவில்லை.
 
தமிழிலும் ‘சங்கமித்ரா’ படத்தில் இருந்து விலகிவிட்டதால், அவர் அப்பா இயக்கும் ‘சபாஷ் நாயுடு’ மட்டுமே கைவசம்  இருக்கிறது. ‘பிக் பாஸ்’ மற்றும் ‘விஸ்வரூபம் 2’ ஆகியவற்றில் பிஸியாக இருப்பதால், இந்த வருடம் ‘சபாஷ் நாயுடு’  ஷூட்டிங் தொடங்குமா என்பதே சந்தேகமாக இருக்கிறது.
 
தெலுங்கில் கவர்ச்சியாக நடித்தும் கூட, ஸ்ருதியைக் கண்டு கொள்வார் இல்லை. அவருக்கு 30 வயதாகிவிட்டதால், சீனியர்  நடிகை பட்டியலில் சேர்த்துவிட்டனர்.