1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam
Last Updated : வெள்ளி, 28 ஏப்ரல் 2017 (13:12 IST)

முதியோர் பென்ஷன் தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்தும் படம்

வயதானவர்களுக்கு வழங்கப்படும் பென்ஷனில் நடக்கும் தில்லுமுல்லுகளை அடிப்படையாக வைத்து ஒரு படம் எடுக்கப்பட்டு  வருகிறது.

 
உதயகுமார் இயக்கும் இந்தப் படத்தில், ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தில் நடித்த சந்தோஷ் ஹீரோவாக நடிக்கிறார். போஸ்ட்மேன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் இவர். காதலும், செண்டிமெண்டும் சரிக்கு சமமாக இருக்கும் இந்தப் படத்தில், முதியோர் பென்ஷனில் என்னவெல்லாம் தில்லுமுல்லுகள் நடக்கின்றன என்பதை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறார்களாம். 
 
நிகாரிகா ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தில், ‘லொள்ளு சபா’ சாமிநாதன், மனோபாலா, முனீஸ்காந்த் ஆகியோர்  நடிக்கிறார்கள். கோபிசெட்டிபாளையத்தில் நடப்பதாக கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், சென்னை மற்றும் கோயம்புத்தூரில் மட்டுமே ஷூட்டிங் நடைபெற உள்ளது. இன்று முதல் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.