Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வாங்க ஆளில்லை... இன்னும் விற்கப்படாத விஜய், ரஜினி படங்களின் தொலைக்காட்சி உரிமை

Sasikala| Last Modified வெள்ளி, 30 டிசம்பர் 2016 (15:59 IST)
சின்ன நடிகர்களின் படங்களுக்குதான் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை வாங்க ஆளில்லாமல் இருந்தது. இப்போது நிலைமை  மேலும் மோசமடைந்துள்ளது. இந்த வருடம் சூப்பர்ஹிட் படங்கள் தந்த விஜய், ரஜினியின் படங்களின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையே இன்னும் விற்கப்படாமல் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 
ஏப்ரலில் வெளியான விஜய்யின் தெறி இந்த வருடம் வெளியான முதல் ப்ளாக் பஸ்டர் திரைப்படம். இந்த வருடம் வெளியான  தமிழ்ப் படங்களில் அதிகம் வசூலித்தது கபாலி. இவ்விரு படங்களின் தொலைக்காட்சி உரிமைக்கு அதிக பணம் கேட்பதால் எந்த தொலைக்காட்சியும் இந்தப் படங்களின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை வாங்க முன்வரவில்லை என கூறப்படுகிறது.
 
முன்னணி நடிகர்களின் படங்களுக்கே இந்த நிலை என்றால் மற்றவர்களுக்கு...?


இதில் மேலும் படிக்கவும் :