செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 30 அக்டோபர் 2018 (15:22 IST)

டைட்டில்ல பேர்லாம் போடமாட்டோம் – ஏ ஆர் முருகதாஸ் விளக்கம்

இன்று காலை நீதிமன்றத்தில் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் தரப்பு வருண் ராஜேந்திரனோடு சமாதானமாகப் போவதாக அறிவித்ததை அடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

சர்கார் கதை திருட்டு சம்மந்தமாக நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில். சர்கார் படத்த்டின் கதை ராஜேந்திரனுடையதுதான் என ஒப்புக்கொண்டதாகவும், படத்தின் தொடக்கத்தில் கதை நன்றி என்ற பிரிவில் வருண் ராஜேந்திரன் பெயர் இடம்பெறும் எனவும் தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் வருண் கோரிய இழப்பீட்டுத் தொகையான 30 லட்சத்தை கொடுப்பதாகவும் அறிவித்தார். இதையடுத்து வழக்கு நீதிபதிகளால் முடித்து வைக்கப்பட்டது.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த வருண் விஜய் சர்கார் அமைக்க தனது செங்கோலை தருவதாகக் கூறியிருந்தார். பிரச்சனை இதோடு முடிந்துவிட்டது என்றிருந்த நிலையில் டைட்டிலில் வருண் ராஜேந்திரனின் பெயர் இடம்பெறாது என ஏ ஆர் முருகதாஸ் தற்போது தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் இதேப் போன்ற ஒரு கதையை ஒரு உதவி இயக்குனர் எழுதி உள்ளார் என்பதால் அவரை ஊக்குவிக்கும் பொருட்டு ‘இதேப் போன்ற கதையை வருண் ராஜேந்திரன் என்பவரும் எழுதி இருக்கிறார்’ என்ற தகவல் மட்டுமே படத்திற்கு முன்பு இடம்பெறும் எனவும் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ஆகிய பிரிவுகளில் தனது பெயர் மட்டுமே இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.