வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : புதன், 9 ஜனவரி 2019 (16:11 IST)

வடிவேலு இல்லாமல் சமூக வலைதளங்கள் இல்லை: நீயா நானா கோபிநாத் பேச்சு

சென்னையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நீயா நானா நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத், வடிவேலு இல்லாமல, அவரது காமெடி வார்த்தைகள் இல்லாமல் சமூக வலைதளங்களே இல்லை என்று தெரிவித்தார்.


 
சமூக வலைதளங்ளில் மீம்ஸ் போடுவது என்பது வடிவேலுவின் முகபாவனைகளை வைத்து  பெரும்பாலும் இருக்கிறது. எந்த மீம்ஸ், அல்லது எந்த டிரோல் வீடியோவாக இருந்தாலும் அதில் வடிவேலு ரியாக்சன் நிச்சயம் இருக்கும். அந்த அளவுக்கு வடிவேலுதான் சமூக வலைதளங்களில் ஆக்கிரமித்து வாழ்கிறார்.
 
இந்நிலையில்  சென்னையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நியா நானா நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத், பேசுகையில்,  வடிவேலு இல்லாமல் சமூக வலைதளங்கள் இல்லை. அவர் வெறும் காமெடி நடிகனில்லை. மிகப்பெரிய லெஜண்ட். வடிவேலு இப்போது நடிக்காமல் இருக்கலாம். நடிப்பது குறைந்திருக்கலாம். ஆனாலும் அவர் சொன்ன வசனங்களைக் கொண்டு இன்னும் ஒரு தலைமுறையைத்தாண்டியும் கூட சமூக வலைதளங்கள் பரபரப்புடன் இருக்கும். வடிவேலுவின் ‘ஆஹான்’ சொல்லாத விஷயமே இல்லை. வைச்சு செஞ்சிருவேன், வேற லெவல், சண்டைல கிழியாத சட்டை எங்கே இருக்கு, நாங்கள்லாம் அப்பவே அப்படி... இப்படியாக வடிவேலுவின் வசனங்களை வைத்து சமூக வலைதளங்களில் ஸ்டேட்டஸ், மீம்ஸ் போட்டுக் கலக்கியெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். என்றார்.