‘நோ கிளாமர்’ - ஸ்ட்ரிக்ட் கண்டிஷன் போடும் பிரியா பவானிசங்கர்
கிளாமராக நடிக்கவே மாட்டேன் என்று கண்டிஷன் போடுகிறாராம் பிரியா பவானிசங்கர்.
‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் பிரியா பவானிசங்கர். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ வரை சீரியல் மூலம் புகழ்பெற்றார். வைபவ் ஜோடியாக அவர் நடித்த ‘மேயாத மான்’ படம், அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்துள்ளது. இதனால், அவரைத் தேடி ஏகப்பட்ட வாய்ப்புகள் வருகின்றன. கார்த்தி ஜோடியாக பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிப்பவர், விஜய் சேதுபதியின் ‘ஜுங்கா’ படத்திலும் நடிக்கிறார். அத்துடன், அருள்நிதி ஜோடியாக ‘புகழேந்தி எனும் நான்’ படத்திலும் நடிக்கிறார்.
ஏகப்பட்ட கதைகள் தேடிவந்தாலும், அதில் தேர்ந்தெடுத்து மட்டுமே நடிக்கிறார் பிரியா பவானிசங்கர். அதுவும் கிளாமர் கதைகள் என்றால் ஸ்ட்ரிக்ட்டாக ‘நோ’ சொல்லிவிடுகிறாராம். இப்படி இருந்தால் எத்தனை நாளைக்கு காலம் தள்ளமுடியும் என்கிறார்கள் சினிமாக்காரர்கள்.