1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: திங்கள், 2 ஜூன் 2014 (19:44 IST)

போட்ட முதலை எப்படியும் எடுப்போம் - கோச்சடையான் தயாரிப்பாளர்

கோச்சடையான் தமிழ், தெலுங்கில் நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்தியில் படம் பிக்கப்பாகவில்லை. படத்துக்கு முதல்நாளிலிருந்தே கூட்டமில்லை.
பெரும்பாலான திரையரங்குகளிலிருந்து படத்தை தூக்கிவிட்டதாகவும் செய்திகள் வருகின்றன. அதனை படத்தின் இணை தயாரிப்பாளரான முரளி மனோகரும் ஒப்புக் கொண்டுள்ளார்.
 
சமீபத்தில் கோச்சடையான் குறித்து பேட்டியளித்த முரளி மனோகர், குறுகிய நேரத்திலும் குறைந்த பட்ஜெட்டிலும் கோச்சடையான் படத்தை உருவாக்கினோம். இன்னும்கூட நன்றாக செய்திருக்கலாம். அதன் அடுத்தப் பாகத்துக்கு இன்னும் அதிக சிரத்தை எடுத்துக் கொள்வோம்.
 
மோஷன் கேப்சர் இந்திய ரசிகர்களுக்கு புதிது. தமிழ், தெலுங்கு ரசிகர்கள் அதனை மனதார ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் இந்தி ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. வடஇந்தியாவில் கோச்சடையானுக்கு வரவேற்பு இல்லை என்பது உண்மைதான்.
 
இந்திக்கு போட்ட முதலீட்டை எடுக்க நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிக நாள்கள் தேவைப்படுகிறது. எப்படியும் நாங்கள் முதலீடு செய்த பணத்தை எடுத்துவிடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.