1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வெள்ளி, 8 மார்ச் 2024 (12:45 IST)

அஜித்துக்கு மூளை அறுவை சிகிச்சையா? மேனேஜர் சுரேஷ் சந்திரா விளக்கம்..!

அஜித்துக்கு நேற்று சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக செய்தி வெளியான நிலையில் இது முழுக்க முழுக்க பொய் என்று அவருடைய மேனேஜர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். 
 
நடிகர் அஜித் நேற்று காலை சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சாதாரண மருத்துவ பரிசோதனைக்காகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது. 
 
ஆனால் நேற்று இரவு திடீரென அஜித்தின் மூளையில் சிறிய அளவில் கட்டி இருந்ததாகவும் அதை அகற்றுவதற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் இன்னும் இரண்டு நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் இது குறித்து அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்துள்ளார். அதில் ’நடிகர் அஜித்குமாருக்கு மூளையில் கட்டி என்பதெல்லாம் உண்மை இல்லை, வழக்கமான மருத்துவ பரிசோதனை மேற்கண்ட போது, காதுக்கு கீழே நரம்பு வீக்கம் இருந்தது கண்டறியப்பட்டது.  அரை மணி நேரத்தில் அதற்கான சிகிச்சை முடிந்து நேற்று இரவு சாதாரண வார்டுக்கு அஜித் மாற்றப்பட்டார். அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து இன்று இரவு அல்லது நாளை அவர் வீடு திரும்பினார் என சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.
 
இதனை அடுத்து அஜித்துக்கு மூளை அறுவை சிகிச்சை என்பது முழுக்க முழுக்க வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
Edited by Siva