ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 3 செப்டம்பர் 2020 (13:23 IST)

சரக்கைப் போட்டு பப்பில் செம்ம டான்ஸ் ஆடும் நிவேதா தாமஸ் – வைரலாகும் பாடல்!

தெலுங்கு சினிமாவில் நானி நடிப்பில் உருவாகியுள்ள வி திரைப்படத்தில் நிவேதா தாமஸ் இடம்பெறும் பாடல் காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

பாபநாசம் படத்தில் கமலுக்கு மகளாகவும், தர்பாரில் ரஜினிக்கு மகளாகவும் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் நிவேதா தாமஸ். அதற்கு முன்னர் குழந்தை நட்சத்திரமாகவே பல படங்களில் நடித்திருந்தார். இருப்பினும் அவருக்கு தமிழை விட தெலுங்கில்தான் அதிக வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.

இந்நிலையில் அமேசான் ப்ரைமில் வெளியாக இருக்கும் வி என்ற திரைப்படத்தில் அவர் நடித்துள்ள கிளப் சாங்க் ப்ரோமோ இப்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த பாடலில் செம்ம டான்ஸ் ஆடி இளைஞர்களை கவர்ந்துள்ளார் நிவேதா.