திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 4 பிப்ரவரி 2021 (15:53 IST)

முதல் காதல் தோல்வி… அதனால் இப்ப வரை சிங்கிள்தான் – பிரபல நடிகை பகிர்ந்த ரகசியம்!

நடிகை நித்யா மேனன் தனது காதல் தோல்வி பற்றி முதல் முறையாக பேசியுள்ளார்.

மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நித்யா மேனன் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் அவ்வப்போது நடித்து வருகிறார். நடிகையாக இருந்தாலும் இயக்கத்தைப் பற்றியும் சினிமாவைப் பற்றியும் நல்ல அறிவு உள்ள நடிகை என பாராட்டப்படுபவர் அவர். 32 வயதாகியும் அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.

இந்நிலையில் அதற்கான காரணம் குறித்து இப்போது நித்யா மேனன் பேசியுள்ளார். தனது முதல் காதல் தோல்வி அடைந்ததால் சில காலம் ஆண்கள் மேல் வெறுப்புடன் இருந்ததாக அவர் கூறியுள்ளார். அதனால் இப்போது வரை வேறு எந்த நபர் மேலும் காதல் பூக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.