வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 30 மார்ச் 2022 (08:29 IST)

28 ஆண்டுகளுக்கு பின் ரீஎண்ட்ரியாகும் தமிழ் நடிகை!

28 ஆண்டுகளுக்கு பின் ரீஎண்ட்ரியாகும் தமிழ் நடிகை!
தமிழ் நடிகை ஒருவர் 1994ஆம் ஆண்டு கடைசியாக ஒரு திரைப்படம் நடித்த நிலையில் தற்போது 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரீ-என்ட்ரி ஆகிறார். 
 
ராமராஜன் நடித்த எங்க ஊரு பாட்டுக்காரன் என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை நிஷாந்தி. இவர் பிரபல நடிகை பானுப்பிரியாவின் தங்கை என்பது குறிப்பிடத்தக்கது.
 
 இந்நிலையில் பாலிவுட்டில் உருவாக இருக்கும் இந்தியாவின் நைட்டிங்கேல் என்று போற்றப்பட்ட சரோஜினி நாயுடுவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிப்பதற்காக நிஷாந்தி ஒப்பந்தமாகியுள்ளார்
 
இந்த படத்தின் கேரக்டர் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் இந்த படத்தில் நடிப்பது தனக்கு மிகப்பெரிய பெருமைக்குரியது என்றும் அவர் தெரிவித்தார்