ஜிகர்தண்டா 2 படத்தில் இணையும் மலையாள நடிகை…!
இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஜிகர்தண்டா 2 திரைப்படம் உருவாக்க, கார்த்திக் சுப்பராஜ் திரைக்கதை எழுதி வருகிறார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனம் ஆகியோர் நடிப்பில் 2014ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதுடன் நல்ல விமர்சனத்தையும் பெற்றது. இந்த படத்தில் அருமையான நடிப்பை வெளிப்படுத்திய பாபி சிம்ஹாவுக்கு தேசிய விருதும் கிடைத்தது.
இந்நிலையில் இப்போது ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. முதல் பாகத்தை தயாரித்த கதிரேசனே இந்த பாகத்தையும் தயாரிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் இப்போது ஜிகர்தண்டா 2 திரைப்படத்தின் தயாரிப்பாளர் மாறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜி ஸ்டுடியோஸ் வழங்க, இயக்குனர் கார்த்திக் சுப்பராஜே இந்த படத்தை தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. முன்னதாக கார்த்திக் சுப்பராஜ், முதல் பாகத்துக்கும் இரண்டாம் பாகத்தும் சம்மந்தம் இல்லை என கூறியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக மலையாள சினிமாவை சேர்ந்த நிமிஷா சஜயன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் தமிழில் ஏற்கனவே அச்சம் என்பது இல்லையே என்ற படத்தில் அருண் விஜய்யோடு நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.