நிக்கி கல்ரானியின் வாய்ஸ் மாறுமா?

cauveri manickam| Last Modified சனி, 8 ஜூலை 2017 (12:32 IST)
ஆண் குரலில் நிக்கி கல்ரானி பேசுவது போல் நடித்திருந்த ‘மரகத நாணயம்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது.
 ஆதி, நிக்கி கல்ரானி, ஆனந்த் ராஜ், ராம்தாஸ் நடிப்பில், ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கியிருந்த படம் ‘மரகத நாணயம்’. தெலுங்கு காமெடி நடிகரான பிரம்மானந்தம், சிறிய கேரக்டரில் நடித்திருந்தார். மொக்கை போடும் பேய்ப் படங்களுக்கு நடுவில், வயிறு வலிக்க சிரிக்க வைத்தது இந்தப் படம். அதனால், பாக்ஸ் ஆபிஸில் ஹிட்டாகி, வசூலையும் குவித்தது. ஒரு படம் ஹிட்டானால், அதன் இரண்டாம் பாகம் எடுப்பது சினிமாவில் வழக்கம்தானே…

அதன்படி, இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவும் அதிக வாய்ப்பிருப்பதாகச் சொல்கின்றனர். ஆனந்த் ராஜ் மற்றும் பிரம்மானந்தம் கையில் ‘மரகத நாணயம்’ கிடைத்திருப்பது போல் படத்தை முடித்திருப்பார் இயக்குனர். எனவே, அதிலிருந்து தொடங்கி, அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பது அடுத்த பாகமாக விரியலாம் என்கிறார்கள்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :