லிப்லாக் அடித்து திருமண நாளை கொண்டாடிய பிரபல ஜோடி - வீடியோ!
தமிழ் மற்றும் தெலுங்கில் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி ஜோடி சில படங்களில் இணைந்து நடித்து வந்தனர். இதனால் இந்த ஜோடி கவனத்தை ஈர்த்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும் இருவரும் காதலித்து வந்ததை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் இருவரும் இந்த செய்திகளை மறுக்கவும் இல்லை.
இதையடுத்து கடந்த ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். இந்நிலையில் தங்களது முதலாவது திருமண நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகிறார்கள். இருவரும் ரொமான்டிக்காக எடுத்துக்கொண்ட அழகான புகைப்படங்களை வெளியிட்டு " உன்னை நேசிக்கும் உணர்வு ஒருபோதும் பழையதாகாது இனிய ஆண்டுவிழா என் அன்பே. 365 நாட்கள் எங்களின் வாழ்த்துகள்! என கேப்ஷன் கொடுத்துள்ளார் நிக்கி கல்ராணி. இந்நிலையில் பாரிஸில் லிப்லாக் அடித்து அன்பை பகிர்ந்துக்கொண்ட ரொமான்டிக் வீடியோ ஒன்றை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.