1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Suresh
Last Modified: வெள்ளி, 21 நவம்பர் 2014 (10:45 IST)

நிகிஷா படேலை தள்ளிவிட்ட கோபக்கார குதிரை

நிகிஷா படேல் தற்போது கரையோரம் என்ற தமிழ்ப் படத்தில் நடித்து வருகிறார். ஒரேநேரத்தில் இதனை தமிழ் மற்றும் கன்னடத்தில் தயாரிக்கிறார்கள்.
 
த்ரில்லர் வகையைச் சேர்ந்த இந்தப் படத்தில் நிகிஷா குதிரையில் ஏறி சண்டையிடுவது போன்று காட்சி உள்ளது. இந்தக் காட்சியின் போது நிகிஷா குதிரையில் ஏறி அமர்ந்ததும், அதுவரை சாதுவாக நின்ற குதிரை கோபத்தில் துள்ளி குதிக்க ஆரம்பித்திருக்கிறது. ஒரு குதிரை என்னுடைய முதுகில் ஏறுவதா என்று குதிரை நினைத்திருக்கலாம்.
 
குதிரை போட்ட ஆட்டத்தில் அதன் மீதிருந்து தூக்கி வீசப்பட்டிருக்கிறார் நிகிஷா. பெரிய அடியில்லை. ஆனால் அழகான உடம்பில் ஆங்காங்கே சிராய்ப்புகள்.
 
சிலரைப் போல் இந்த மாதிரியெல்லாம் நான் நடிக்க மாட்டேன் என்று கூறாமல், நடிப்புன்னு வந்தா இதெல்லாம் சகஜம்தான் என்று குதிரை விபத்தை டேக் இட் ஈஸியாக எடுத்துக் கொண்டிருக்கிறார்.