புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 21 ஆகஸ்ட் 2019 (18:57 IST)

ஜேம்ஸ்பாண்ட் படங்களில் அடுத்து வருவது ’நோ டைம் டூ டை ’ : ரசிகர்கள் மகிழ்ச்சி

ஜேம்ஸ் பாண்ட் படங்கள் என்றாலே ரசிகர்களின் மகிழ்ச்சிக்கு பஞ்சம் இருக்காது. அதில் வரும் சண்டைக் காட்சிகளும், சில்மிஷக் காட்சிகளும், காட்சியமைப்புகளும் நம்மூர் மட்டுமல்லாது உலகில் உள்ள சினிமா ரசிகர்களை எல்லாம் கட்டிப்போட்டுவிடும்.
இதுவரை 24 ஜேம்ஸ்பாண்ட் படங்கள் வெளியாகியுள்ளன.  இந்நிலையில் ஜேம்ஸ்பாண்ட் படங்களின் வரிசையில் டேனியல் கிரெய்க் நடிக்கும் புதிய படத்திற்கு நோ டைம் டூ டை என்று பெயரிட்டுள்ளனர்.

சமீபத்தில் இதற்கான டீசர் வெளியிடப்பட்டது. எனவே படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என்று தெரிகிறது. இப்படத்தில் ஆஸ்கர் விருது பெற்ற ராமி மிலேக் வில்லனாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.