Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நியூயார்க் இந்தியன் திரைப்பட விழாவில் தேர்வாகியுள்ள 3 தமிழ் படங்கள்!

Sasikala| Last Modified சனி, 25 மார்ச் 2017 (15:48 IST)
2017 ஆண்டு நியூயார்க் இந்தியன் திரைப்பட விழாவில் திரையிட மூன்று தமிழ் திரைப்படங்கள் தேர்வாகியுள்ளன. இதில் எந்தப் படமும் மாஸ் நடிகர்கள் நடித்ததோ, முன்னணி இயக்குனர் இயக்கியதோ கிடையாது.

 
17வது நியூயார்க் இந்திய திரைப்பட விழா, ஏப்ரல் 30-ம் தேதி முதல் மே 7-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் விதார்த்  நடித்துள்ள 'ஒரு கிடாயின் கருணை மனு', கதிர் நடித்துள்ள 'சிகை' மற்றும் விஜய் சேதுபதி தயாரிப்பில் உருவாகியுள்ள 'மேற்கு  தொடர்ச்சி மலை' ஆகிய படங்கள் மட்டும் தேர்வாகியுள்ளன.
 
சிகை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஆகிய படங்கள் இந்தியாவில் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டாலும்,  உலக அளவில் திரையிடப்படுவது இதுவே முதல் முறையாகும். தங்களுடைய படங்கள் நியூயார்க் நகரில் நடைபெறும் விழாவுக்கு தேர்வாகியுள்ளதால், இப்படங்களின் குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :