திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 21 ஏப்ரல் 2022 (18:40 IST)

ராஜமவுளியின் அடுத்த பிரமாண்ட படத்தின் புதிய அப்டேட் !

இந்திய சினிமாவில் முன்னணி இயக்குநர் ராஜமவுளி. இவரது இயக்கத்தில் வெளியான பாகுபலி 1-2 ஆகிய படங்கள் உலகளவில் மிகப்பெரிய ஹிட் அடித்து வசூல் ரீதியாகச் சாதனை படைத்த நிலையில், சமீபத்தில் இவரது இயக்கத்தில் தெலுங்கு ஹீரோக்கள் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் நடிப்பில் வெளியான படம் ஆர்.ஆர்.ஆர். இப்படம் ரூ.700 கோடிக்கு மேல் வசூல் குவித்துள்ளது.

இந்நிலையில், ராஜமவுலி இயக்கும் அடுத்த படம் குறித்து இந்திய சினிமாத்துறையினர் ஆர்வமுடம் கவனித்து வருகின்றனர். இப்படத்தின் அப்டேட் எப்போது வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இந்நிலையில், ராஜமவுலி அடுத்து இயக்கவுள்ள படத்தில்  சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிக்கவுள்ளதாகவும், இப்படத்தின் பட்ஜெட் ரூ.500 கோடி எனவும்,இப்படத்தின் ஷூட்டிங ஆப்பிரிக்க காடுகளில் நடத்தடலாம் எனவும் இப்படத்தின் கதை புதையலை அடிப்படையாகக் கொண்டது எனக் கூறப்படுகிறது,

மேலும், இப்படத்திற்கு ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளதாகவும் கூறப்படுகிறது.