1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 21 அக்டோபர் 2020 (16:21 IST)

வார இறுதி நாளில் நெட்பிளிக்ஸ் இலவசம் – வாடிக்கையாளர்களைக் கவர புதிய திட்டம்!

நெட்பிளிக்ஸ் இந்தியாவில் புதிய வாடிக்கையாளர்களைக் கவர வார இறுதிநாளில் இலவசம் என்ற அறிவிப்பை வெளியிட உள்ளது.

கொரோனாவால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து நாடுகளும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் உலகின் பெரும்பகுதி மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். அவர்களுக்கு பொழுதுபோக்காக நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் ப்ரைம் போன்ற ஸ்ட்ரீமிங்க் தளங்கள் இருந்து வருகின்றன. உலக அளவில் முன்னணி ஓடிடி நிறுவனமாக நெட்பிளிக்ஸ் இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் மேலும் வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக வார இறுதி நாளில் இலவசமாக தங்கள் சேவையை வழங்க உள்ளது. இதன் மூலம் புதிய வாடிக்கையாளர்கள் நெட்பிளிக்ஸில் இருக்கும் கதைகள் மற்றும் படங்களைப் பற்றிய அறிமுகம் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளனர். விரைவில் இந்த சலுகை இந்தியாவில் இருந்து அறிமுகப்படுத்தப்படும் என சொல்லப்படுகிறது.